அரசாங்கத்திற்கும் TNA க்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒத்தி வைவைப்பு

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது.

அரசாங்கத்தினால் இந்த பேச்சுவார்த்தைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் 1ம் திகதி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவிருந்த நிலையில் திடீரென அரசாங்கம், பேச்சுவார்த்தைகளை ஒத்தி வைப்பதாக கடிதம் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அறிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பிரச்சாரப் பணிகள் காரணமாக பேச்சுவார்த்தைகளை நடத்த முடியவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

 உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரே அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அமைச்சரவைக் கூட்டத்தை அரசாங்கத்தினால் நடத்த முடியுமாயின் ஏன் தங்களுடான பேச்சுவார்த்தையை நடத்த முடியாது என கேள்பி எழுப்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் பதில் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டங்கள் அல்லது பாராளுமன்ற அமர்களின் பின்னர் கூட இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply