ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் இன்று ஆரம்பம்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் இன்றைய தினம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமாகவுள்ளது.இலங்கையின் சார்பில் முன்னாள் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் குழு அமர்வுகளில் பங்கேற்கும் என அறிவி;க்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவனீதம் பிள்ளையை சந்தித்து நிலைமைகளை விளக்கியதாக அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.
மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படக்கூடும் எனவும், இதனை முறியடிக்கும் நோக்கில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் நடைபெறவுள்ள ஆரம்ப அமர்வுகளில் இலங்கையின் நிலைமைகள் குறித்து தாம் தெளிவுபடுத்த உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் ஆரம்பமாகும் அமர்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 25ம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த அமர்வுகளின் போது சில ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களை சுமத்தக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
2009ம் ஆண்டிலும் மனித உரிமைப் பேரவையில் சில நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்த போதிலும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் அதனை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply