பெளத்த அறநெறிகளூடாக சவால்களை சமாளிப்போம் வெசாக் செய்தியில் : ஜனாதிபதி
நம் எதிரே வருகின்ற அனைத்து சவால்களின் போதும் புத்த பெருமானின் அறநெறி களினால் போஷிக்கப்பட்ட முன்மாதிரிகளை உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள வெசாக் தின வாழ்த்துச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு ள்ளதாவது :-
பூரண அரச அனுசரணையுடன் 2600வது புத்த ஜயந்தி வெசாக் மகோற்சவத்தை பக்திபூர்வமாக கொண்டாடுகின்றோம்.
புத்த போதனை இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளாக அனைத்து மக்கள் சமுதாயத்துக்கும் சரியான பாதையைக் காட்டியுள்ளது. உலக வாழ் மக்கள் அனைவரும் அதன் மூலம் எல்லையில்லாத மன நிம்மதியைப் பெற்றிருந்தனர்.
அந்த உயரிய தர்மத்தை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பாது காத்துக் கொண்டதன் காரணமாகவும் அத் தர்மத்தின் பிரகாரம் வாழக்கை முறையை நெறிப்படுத்திக் கொண்டதன் காரணமாகவும் எமது தாயகம் உலகத்தின் கெளரவத்திற்கும் மகத்துவத்திற்கும் பாத்திரமாகின்றது.
நாட்டிற்கு கெளரவமான சமாதானத்தை ஏற்படுத்திய போதும் தாய் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல் கின்ற போதும், புத்த பெருமானார் காட்டித் தந்த நல்வகை பாதகங்கள் அற்ற பாதையையும், தர்மத்தை முதன்மை யாகக்கொண்ட அரச கொள்கையையும் நாம் பின்பற்றினோம்.
அக்கொதென் ஜினோ கொதங் – அசாதுங் சாதுனா ஜினே
ஜினே கதரியங் தானேன – சச்சேன அலிக்கவாதினங்
குரோதத்தை அன்பினால் வெற்றிகொள்ள வேண்டும். தீமையை நன்மையால் வெற்றிகொள்ள வேண்டும், உலோபியை வள்ளல் தன்மையாலும், பொய் சொல் பவனை சத்தியத்தாலும் வெற்றி கொள்ள வேண்டும் என புத்த பெருமானாரின் போதனையில் குறிப்பிடப்படுகின்றது. நம் எதிரே வருகின்ற அனைத்து சவால் களின் போதும் மேற்கூறப்பட்ட உயரிய அறநெறியினால் போஷிக்கப்பட்ட முன் மாதிரியை உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும்.
ஆசையின் காரணமாக உலகத்தில் தோன்றிய அனைத்து முரண்பாடுகளும் தீர்க்கப்பட்டு நல்வழியில் கருணையைப் பரப்புகின்ற பாதையை நாம் திறந்து வைக்க வேண்டும். அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கு அறநெறி வழியை நாம் காட்ட வேண்டும்.
நமது புத்த பெருமானின் இறுதிப் போத னையின் பிரகாரம் அவர் கொள்கைகளைப் பூஜிப்பதற்கு முதலிடம் கொடுத்து தாமத மின்றி நன்மைகளையும் அறத்தையும் சேகரித்து புத்த ஜயந்தி வெசாக் மங்கள உற்சவத்தை அர்த்தமுள்ளதாக்கி புத்த பெருமானை சரணம் அடைய உறுதி பூணுவோமாக.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply