மொழிக் கொள்கையை பின்பற்றாத காவல் துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : வாசுதேவ

உத்தியோகபூர்வ மொழிக் கொள்கையை பின்பற்றாத காவல்துறையினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மொழி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாட்டின் சகல காவல்துறை உத்தியோகத்தர்களும் தேசிய மொழிக் கொள்கைகளை பின்பற்ற வேண்டுமென அவர் வலிறுயுத்தியுள்ளார்.

உத்தியோகபூர்வ மொழிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சிங்கள மற்றும் தமிழ் மக்களின் சம உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

காவல்துறை மோட்டார் போக்குவரத்து பிரிவின் அநேக பதாகைகளில் தமிழ் மொழி கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய மொழிக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்ற போதிலும் காவல்துறை திணைக்களம் முழுமையாக தேசிய மொழிக் கொள்கையை பின்பற்றுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து காவல்துறையினருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. காவல்துறையினர் தொடர்ச்சியாக தமிழ் மொழியை புறக்கணித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply