நிதிக் கட்டமைப்பின் ‘அநீதி’களை எதிர்த்து உலகெங்கும் ஆர்ப்பாட்டம்

பெரிய தொழில் நிறுவனங்களின் பேராசை என்று சொல்லப்படும் விஷயத்துக்கு எதிராக உலகெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அமெரிக்காவில் வாரக்கணக்காக நடந்துவரக்கூடிய ‘வால்ஸ்டிரீட் எதிர்ப்பு’ ஆர்ப்பாட்டங்களால் உந்தப்பட்டு இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஐரோப்பிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
இவற்றில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் என்பது இத்தாலியின் ரோம் நகரில் நடந்தது. அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகளை அடித்தும் நொறுக்கியும் கார்களுக்கு தீவைத்தும் இருந்தனர்.

ஜெர்மனியின் ஃபிரான்க்ஃபர்ட் நகரில் ஐரோப்பிய மத்திய வங்கிக்கு வெளியியே சுமார் ஐயாயிரம் பேர் கூடினர்.

லண்டன் பெர்லின், அதென்ஸ், மட்ரிட் போன்ற இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

நிதிக்கட்டமைப்பில் காணப்படும் அநீதிகள் கண்டு தாங்கள் கொத்தித்துப் போயுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக சிட்னி, ஆக்லண்ட், ஹாங்கான், தைபெய் போன்ற ஊர்களிலும் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர்.

உலகின் செல்வம் ஒரு சிலரின் கைகளில் முடங்கிக் கிடக்கிறது ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply