தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் மின்சாரம் தரவேண்டும் : முதல்வர் ஜெயலலிதா
தமிழகம் கடுமையான மின் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுவரும் நிலையில், மத்திய அரசு இந்த நெருக்கடியில் தலையிட்டு உதவவேண்டும் என்றும், தமிழகத்துக்கு கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் தான் தில்லி சென்றிருந்தபோதே தமிழகத்தின் மின் நெருக்கடி தொடர்பில் பிரதமரிடம் தான் பேசியிருந்ததாக தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மின் வழங்கு கட்டமைப்புகள் ஓராண்டு காலம் தமிழகத்துக்கு 1000 மெகாவாட் மின்சாரத்தைக் கூடுதலாக வழங்கி தமிழகம் தனது மின் நெருக்கடியை சமாளிக்க உதவ வேண்டும் என ஜெயலலிதா கோரியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply