அமெரிக்க அதிகாரிகள் இந்திய அதிகாரிகள் மீது அழுத்தம் பிரயோகிப்பரா?
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று அவசரமாகப் புதுடில்லி சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஐ.நா. மனிதஉரிமைகள் சபையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ள அமெரிக்கா, அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதுபற்றி இந்திய அரசுடன் பேச்சு நடத்தவே உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
இந்தக் குழுவினர் நேற்று முன் தினம் காலை புதுடில்லியைச் சென்றடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும் அமெரிக்க அதிகாரிகள் புதுடில்லியில் யாருடன் பேச்சு நடத்தினர் என்ற விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply