இலங்கையை கண்டிக்கும் நோக்கில் உத்தேச தீர்மானம் அமையாது : அமெரிக்கா

இலங்கையை கண்டிக்கும் நோக்கில் உத்தேச தீர்மானம் அமையாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் ஜெனீவா கிளைக்கான அமெரிக்கப் பிரதிநிதி எய்லீன் சம்பர்லீன் டொனஹோ தெரிவித்துள்ளார்.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்பட வேண்டியவை என குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் அமுல்படுத்துவது தொடர்பான தெளிவான திட்டங்களை எதனையும் இதுவரையில் இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யுத்தத்தின் பின்னர் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் முனைப்பு திருப்தி அடையும் வகையில் அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் அமுல்படுத்த வேண்டும் என்பதே உத்தேச தீர்மானத்தின் பிரதான உட்கிடக்கை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டும் என அமெரிக்கா விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply