ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் இலங்கைக்கு திடீர் விஜயம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மர்மமான முறையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அதிகாரிகள் திடீர் இலங்கை விஜயம் ஐக்கிய நாடுகள் பிரகடனங்களையும், இராஜதந்திர நியதிகளையும் மீறும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகளுடன் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் தெரியவருகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் விஜயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளைப் போன்று குறித்த அதிகாரிகள் நாட்டிற்குள் பிரவேசித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply