தாய்லாந்து தேர்தல் வரலாற்றில் பாலினம் மாறிய​ முதல் வேட்பாளர் களத்தில்

தாய்லாந்தை சேர்ந்தவர் யொல்லாதா நொக் சுயான் யாட் (30). இவர் ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். அழகு தேவதையாக விளங்கும் இவர் சமூக சேவைகளில் நாட்டம் உடையவர். பெண்ணாக மாறியவர்கள் சங்கத்தின் தலைவியாகவும் உள்ளார். தாய்லாந்தில் விரைவில் மாகாண பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. அதில்இ போட்டியிட வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது இவர் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இவருக்கு பாலினம் மாறியிருப்பவர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் ஆதரவும் அதிகம் உள்ளது.

தான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஓரின சேர்க்கையாளர் மற்றும் பாலினம் மாற விரும்புவோருக்கு அதற்கான ஆபரேசனை இலவசமாக செய்து தருவதாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

தாய்லாந்து வரலாற்றில் பாலினம் மாறியவர் மாகாண பிரதிநிதி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply