சீன பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 80ஆக உயர்வு

சீனாவில் பயங்கர பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 700க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான், குய்சூ மாகாணங்களில் நேற்று பகல் பூகம்பம் ஏற்பட்டது. லூசிகி நகரில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. இதையடுத்து 16 முறை தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். கட்டிடங்கள் நொறுங்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

700க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் மீட்புப் படையினரால் நிவாரண பணிகளை வேகமாக செய்ய முடியவில்லை. இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பூகம்பத்தால் பல இடங்களில் மின்சாரம், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் நொங்கி உள்ளன. சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2வது நாளாக மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply