மூன்று மாகாண சபை முடிவுகளும் ஒரே பார்வையில்

நடந்து முடிந்த கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான தேர்தலின் இறுதி மாகாண முடிவுகளின் அடிப்படையில் மூன்று மாகாணங்களின் ஆட்சியையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது.

கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வெற்றியை பெற்ற போதிலும் அம்பாறை மாவட்டத்தில் சொல்லக் கொள்ளக்கூடிய அளவு வெற்றியை பெறவில்லை.

அதனால் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2ம் இடம் இடத்தை பிடித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் எதிர்பார்த்தளவு வாக்குகளைப் பெற முடியவில்லை.

இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் வேண்டும் என ஐனநாயக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்தமை ஓரளவுக்கு திருப்திகரமான வெற்றியை அளித்துள்ளது.

சம்பரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரியிலும் கேகாலையிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டணி தலா ஒவ்வொரு ஆசனங்களை வென்றுள்ளது.

மூன்று மாகாணங்களின் மொத்த இறுதித் தேர்தல் முடிவுகள் வருமாறு:

வட மத்திய மாகாண மொத்த முடிவுகள்:

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னிணி – 338552 வாக்குகள் – 21 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – வாக்குகள் – 196127 – 11 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி – 16066 வாக்குகள் – 1 ஆசனம்

கிழக்கு மாகாண மொத்த முடிவுகள்:

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னிணி – 200,044 வாக்குகள் – 14 ஆசனங்கள்

இலங்கை தமிழரசு கட்சி – 193,827 வாக்குகள் – 11 ஆசனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 132,917 வாக்குகள் – 7 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 74,901 வாக்குகள் – 4 ஆசனங்கள்

தேசிய சுதந்திர முன்னணி – 9,522 வாக்குகள் – 1 ஆசனம்

சப்ரகமுவ மாகாண மொத்த இறுதி முடிவுகள்:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி :- 488,714 வாக்குகள் – 28 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி :- 286,857 வாக்குகள் – 14 ஆசனங்கள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் :- 25,985 வாக்குகள் – 2 ஆசனம்

மக்கள் விடுதலை முன்னணி – 12,164 வாக்குகள் – ஆசனம் இல்லை

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply