காசா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தம்

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 8வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில் இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலை நிறுத்துமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 120 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் போர் நிறுத்த முயற்சி, ஐ.நா.சபை எதிர்ப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு காசா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒருவார காலப்பகுதிக்குள் 1350 இலக்குகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது 100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாஹீவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இந்நிலையில் காஸா பகுதியில் இஸ்ரேல் படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிராக கண்டம் வெளியிடுமாறு பலஸ்தீன் ஒருமைப்பாட்டுக்கான இலங்கை இயக்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தக் கோரிக்கையை பஸ்தீன் ஒருமைப்பாட்டுக்கான இலங்கை இயக்கத்தின் பொது செயலாளர் என்.களுதந்திரி கையொழுத்திட்டு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply