இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன
புழல் பகுதி கண்ணப்பசாமி நகர் காவாங்கரை பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.மறுவாழ்வுத்துறை துணை ஆட்சியர் மங்களநாதன் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். புழல் பகுதியில் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் 395 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 276 பேர் வசிக்கின்றனர்.இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு 25 கோடி ரூபா செலவில் இரண்டாயிரத்து 500 வீடுகள் அமைத்துக் கொடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் இவ்வாறு உத்தரவிட்டுள்ள நிலையிலேயே, மறுவாழ்வுத்துறை துணை ஆட்சியர் இந்த ஆய்வை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply