சுகயீனப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை – இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்
எதிர்வரும் 4ம் திகதி நடைபெறவுள்ள சுகயீனப் போராட்டத்தில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (01) காலை 11 மணியளவில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைமைப் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இலங்கை தமிழர் ஆசிரிய சங்க பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலைகளில் ஆண்டிறுதிப் பரீட்சை நடைபெறுவதனால் எமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை. அதை விட கல்வி பொது தராதர (சாதாரண) பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சை எழுதும் பிள்ளைகளின் மனநிலை பாதிக்கும் அளவிற்கு நாம் நடந்து கொள்ள கூடாது என்பதற்காகவும் இழந்து போன எமது பிள்ளைகளின் கல்வியை மீட்டெடுப்பதற்காகவும் எமது தமிழ் பேசும் ஆசிரியர்கள் எந்த விதமான போராட்டத்திலும் இப்போதைக்கு இறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளும் அதேநேரம் எதிர்வரும் 4ம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை கடந்த 28ம் திகதி யாழ். பல்கலைகழக மாணவர்கள் இராணுவத்தினராலும் பொலிசாராலும் தாக்கப்பட்டதை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டிப்பதாகவும் கல்வி கற்க வந்த மாணவர்களை போராட்டங்களுக்குள் இழுத்து விடக்கூடாது எனவும் மாணவர்கள் தமது கல்வியை சுதந்திரமாக தொடர வழி விடவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply