மகேஸ்வரனின் சகோதரர் மீது அசிட் வீச்சு

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரனின் சகோதரரும் ஈஸ்வரன் டிரேடர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான துவாரகேஸ்வரன் மீது இனந்தெரியாத நபர்கள் அசிட் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம், இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் திருநெல்வேலி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply