இலங்கை விவகாரம்: திமுகவுடன் ஆலோசித்த பின்னரே முடிவு – சல்மான் குர்ஷித்

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தில் மாற்றம் கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கலைஞர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த இன்னும் காலஅவகாசம் உள்ளது. இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக விலகும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு,

அவரது கருத்தை கூறியிருக்கிறார். அதை நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கிறோம்.

இன்றைகு ஐநா வாக்கெடுப்பு நடைபெறபோவதில்லை. இன்றைக்கே ஆதரவு விலக்கிக்கொள்ளப்பட போவதும் இல்லை.

தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது முடிவு செய்யப்படும். ஆலோசனை நடத்தாமல், உடனடியாக முடிவு எடுக்க முடியாது.

அதேசமயம் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். திமுக எங்களுடன் கூட்டணியில் உள்ளனர். அவர்களுடன் இதுதொடர்பாக பேசுவோம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply