தமிழகத்தில் பிக்குகள் தாக்கப்பட்டமைக்கு இலங்கை எதிர்ப்பு

தமிழகத்தின் தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் வைத்து இலங்கை பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை துணை தூதரகம் என்பவற்றின் ஊடாக மத்திய அரசுக்கு இலங்கை தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள நட்புறவை கெடுக்க நினைக்கும் சில தீய சக்திகள் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா செல்லும் இலங்கை பிரஜைகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சு வேண்டிக் கொண்டுள்ளது.

எனவே தமிழகம் செல்வோர் இனி கீழ்கண்ட வழிகளின் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டுச் செல்ல வேண்டும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Address:
56, Sterling Road, Nungambakkam
Chennai – 600 034
Office Telephone Numbers
0091 44 28247896
0091 44 28252612
0091 44 28241047
Fax Nos.
0091 44 28241894
0091 44 28254242
E Mail: sldehico@md3.vsnl.net.in

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply