இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பாஜக ஆதரிக்காது!

இலங்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை பாஜக ஆதரிக்காது என்று தெரிகிறது. இது குறித்து அக் கட்சியின் மூத்த தலைவரான முரளிமனோகர் ஜோஷி கூறுகையில்,  நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வெளியுறவுக் கொள்கை இருக்க முடியாது. வெளியுறவுக் கொள்கை என்பது ஒன்றே ஒன்று தான் இருக்க முடியும் என்றார். 

அதே போல அக் கட்சியின் மூத்த எம்பியான ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில்,

இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு கொண்டு வருவது எங்கள் அரசு இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்வதற்காகத் தானே தவிர, இலங்கைப் பிரச்சனையை உண்மையாகவே மனதில் வைத்து அல்ல என்றார்.

இலங்கை விவகாரத்தில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அந் நாட்டுக்கு எந்த உதவிகளையும் செய்யவில்லை என்பதும், இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி தருவதையும், ஆயுதங்கள் தருவதையும் தடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னரே இலங்கைக்கு அனைத்து உதவிகளும் கிடைத்தன. இந் நிலையில் இப்போது வாஜ்பாய் கால கொள்கையை பாஜக குழி தோண்டிப் புதைக்கத் தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply