மட்டு கடலில் மூழ்கி ஆசிரியர் மாணவர்கள் பலி
பதுளையில் இருந்து மட்டக்களப்புக்கு சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்கள் இருவரும் ஒரு ஆசிரியரும் அடங்கலாக மூவர் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரக் கடலில் நீராடிக் கொண்டிருந்த நிலையில் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர். இச்சம்வம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட நாவலடி வாவியையும் கடலையும் இணைக்கும் முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியில் இன்று (31) காலை இடம்பெற்றது.
பதுளை சரஸ்வதி கணிஸ்ட வித்தியாலய ஆசிரியர் கந்தசாமி பிரதாபன் வயது 40 நாற்பது, ஹாலிஎல ஊவா விஞ்ஞான கல்லூரியில் 2012ஆம் ஆண்டு க.பொ.த. சாதாண பரீட்சை எழுதிவிட்டு ஏப்ரல் 10ஆம் திகதி வெளிவரவுள்ள பெறுபெறுகளை ஏதிர்பார்த்த வண்ணம் இருந்த மாணவர்களான கணகசபை நிதர்சன் வயது 17, போல்ராஜ் சாந்தன் வயது 17, பாலசுப்ரமணியம் அபிசாந்த வயது 17, ஆகியோரே நீரில் மூழ்கி மரணமாகியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 17 வயது கணகசபை நிதர்சனை தவிர ஏனைய முவரின் சடலங்கள் கடற்படையினராலும் அப்பகுதி மீனவர்களினாலும் தேடப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மொத்தமாக 9 பேர் கடலில் நீராடியுள்ளதுடன் இவர்களில் நால்வரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அண்மையில் இதே கடற்பரப்பில் 2012ஆம் ஆண்டு க.பொ.த. சாதாண பரீட்சை எழுதிவிட்டு பெறுபெறுக்காக காத்திருந்த டிலுஸ்காந் எனும் மாணவன் நண்பனை காப்பாற்ற சென்ற வேளையில் கடலுக்கு இரையாகியமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply