ஈரான் மீது புதிய பொருளாதார தடை அவசியமில்லை: ஒபாமா

ஈரான் மீது புதிய பொருளாதார தடை விதிக்க இப்போது அவசியமில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறினார். ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும், ஈரானுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது. மீண்டும் ஜனவரி மாதம் பேச்சு நடத்த இருக்கிறார்கள்.இந்த உடன்பாடு காரணமாக ஈரானுக்கு எதிரான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

ஆனால் ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் பலர் வலியுறுத்தி வருகிறார்கள். பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவும் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

இதுபோன்ற தீர்மானம் வந்தால் ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி செயல் இழக்க வைப்பார் என்று வெள்ளை மாளிகை செய்தி அதிகாரி ஜாய் கார்னே எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி ஒபாமா வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் ஈரான் விவகாரம் குறித்து கூறியதாவது:-

ஈரானுடன் செய்து கொண்டு உடன்பாடு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதை நிறைவேற்றும் விஷயத்தில் சந்தேகப்பட தேவை இல்லை. ஆகவே ஈரான் மீது புதிய பொருளாதார தடைவிதிக்க இப்போதைக்கு அவசியம் இல்லை.

இதில் தலையிட்டால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு சவாலாக அமைந்துவிடும். பாராளுமன்றத்தில் புதிய பொருளாதார தடை விதிப்பதை தவிர்த்து தூதரக முறையில் அணுக முன்வர வேண்டும். உடன்பாட்டை ஈரான் மீறினால் அதன்பிறகு பொருளாதார தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply