ராஜபக்ஷ குடும்பத்திற்கு எவரும் அரசியல் சொல்லித்தர தேவையில்லை : கோத்தபாய

நமக்குள் இருக்­கின்ற பிரச்­சி­னை­களை நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம். வெளி­நாட்­டுக்கு சென்று தீர்வை பெற்றுக் கொள்ள முடி­யாது. தற்­போது நமது நாட்டில் ஏற்­பட்­டுள்ள சமா­தா­னத்­துக்கு யாரா­வது குந்­தகம் செய்ய முனைந்தால் அது இந்த நாட்­டுக்கு செய்யும் பாரிய துரோ­க­மாகும் என்று பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.எந்த சக்­தி­களும் எமது நாட்டு விட­யத்தில் தலை­யிட வேண்­டி­ய­தில்லை. எம்மை யாரும் அடி­மைப்­ப­டு த்த முடி­யாது.நாட்டை ஆட்­சி­செய்­யவும் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­தவும், அபி­வி­ருத்­தியை தொட­ரவும் எமக்குத் தெரியும். 75 ஆண்­டு­கால அர­சியல் அனு­பவம் மிக்க ராஜ­பக் ஷ குடும்­பத்­திற்கு யாரும் அர­சியல் சொல்­லித்­தரத் தேவை­யில் லை என்றும் அவர் கூறினார்.

மட்­டக்­க­ளப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்­டலில் நேற்று மட்­டக்­க­ளப்பு மற்றும் அம்­பாறை மாவட்­டங்­களின் மதத் தலை­வர்கள் மற்றும் சிவில் சமூக பிரதி நிதிகள், அர­சியல் பிர­மு­கர்­களின் சந்­திப்பின் போது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற் கண்­ட­வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்­து­ரை­யாற்­றிய பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ கிழக்கு மாகாணம் ஏனைய மாகா­ணங்­களை விட வித்­தி­யா­ச­மான ஒரு மாகா­ண­மாகும். இந்த மாகா­ணத்தில் சிங்­க­ள­வர்கள், தமி­ழர்கள், முஸ்­லிம்கள், கிறிஸ்­வர்கள், பறங்­கி­யர்கள் என பல்­லின மக்­களும் பல மொழி­க­ளை­ பேசு­கின்­ற­வர்­களும் இங்கு வாழ்­கின்­றனர்.
ஓன்று பட்ட அபி­வி­ருத்­தியும் நல்­லி­ணக்­கமும் இங்கு மேற் கொள்­ளப்­பட்­டுள்­ளது.
ஜனா­தி­பதி 2005ம் ஆண்டு இந்த நாட்டை பொறுப்­பேற்­ற­தி­லி­ருந்து குறு­கிய காலத்­துக்குள் மக்­க­ளுக்­கான சுபீட்­சமும், அபி­வி­ரு­தத்­தியும் மேற் கொள்­ளப்­பட்­டுள்­ளன.

தற்­போது இந்த நாட்டில் ஏற்­பட்­டுள்ள சமா­தா­னத்தை நிலை நாட்ட ஒவ்­வொரு பிர­ஜையும் பாடு­பட வேண்டும். ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் தலை­மை­யி­லான இந்த அர­சாங்கம் கடந்த 4 வருட குறு­கிய காலத்­துக்குள் யுத்­தத்தை முடித்து வட­மா­கா­ணத்தில் மூன்று இலட்­சத்­துக்கு மேற்­பட்ட மக்­களை குடி­ய­மர்த்தி, புனர்­வாழ்­வ­ளித்து அபி­வி­ருத்­தி­களை மேற் கொண்­டுள்­ளது.

தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் இருந்த கால கட்­டத்தில் சில குழுக்­க­ளுக்கு ஆயுதங்கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் அந்த ஆயு­தங்கள் அனைத்­தையும் பேச்­சு­வார்த்­தை­யி­னூ­டாக மீள பெறப்­பட்டு நிரந்­தர சமா­தானம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

பல இரா­ணுவ முகாம்கள் இன்று அகற்­றப்­பட்­டுள்­ளன. பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு தமிழ் மொழி தெரிந்த பொலிசார் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

மக்கள் எந்­த­வொரு கெடு­பி­டி­யு­மின்றி சுதந்­தி­ர­மாக எங்கும் சென்று வரக் கூடிய சூழல் இன்று ஏற்­ப­டுத்தப்­பட்­டுள்­ளன.

வடக்கு மக்களின் வாக்களிப்பு

கடந்த தேர்­தல்­களை பார்க்கும் போது வட­மா­காண மக்கள் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் 5வீதமும், பின்னர் பாரா­ளு­மன்ற தேர்­தலில் 12 வீதமும், அதன் பின்னர் உள்­ளூராட்சி மன்ற தேர்­தலில் 45 வீதமும், கடை­சி­யாக நடை­பெற்ற மாகாண சபை தேர்­தலில் 72 வீதமும் வாக்­க­ளித்­துள்­ளனர்.

இவ்­வாறு அச்­ச­மின்றி வாக்­க­ளிக்­கின்ற சந்­தர்ப்­பமும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. யுத்தம் ஒன்றின் போது உயி­ரி­ழப்­புக்­களும், பொரு­ளா­தார இழப்­புக்­களும் ஏற்­ப­டு­வது சாத­ர­ண­மாகும். எனினும் இந்த நாடு குறு­கிய காலத்­தி­ற்குள் கட்­டி­யெ­ழுப்­ப­ப்பட்­டுள்­ளது.

பல தியா­கங்­க­ளுக்கு மத்­தியில் தற்­போது ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள சமா­தா­ன­த்தை நாம் நிலை பெறச் செய்ய வேண்டும்.

சமா­தா­னத்­திற்கு அநீதி இழைக்க முற்­ப­டு­வ­தா­னது பார­தூ­ர­மான குற்­ற­மாகும். 30 வருட கால யுத்­தத்­திற்கு பின்பு இந்த நாட்டில் வீதி அபி­வி­ருத்தி, மின்­சார அபி­வி­ருத்தி, என பல் வேறு அபி­வி­ருத்­திகள் மேற் கொள்­ளப்­பட்­டுள்­ளன.

பிரச்­சி­னை­களை வன்­மு­றை­களால் தீர்த்துக் கொள்­ளாமல் பேச்­சு­வார்த்­தையின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். நமது பிரச்­சி­னை­க­ளுக்கு நாமே தீர்வு காண­வேண்டும். நமது பிரச்­சி­னை­க­ளுக்கு வெளியில் சென்று தீர்வு காண­மு­டி­யாது.

இந்த நாட்டில் சிங்­க­ள­வர்கள், தமி­ழர்கள் முஸ்­லிம்கள் பறங்­கி­யர்கள் அனை­வரும் ஜனா­தி­ப­தியின் மஹிந்த சிந்­த­னைக்கு அமை­வாக சுபீட்­ச­மாக வாழ்­கின்­றனர்.

அண்­மையில் அமெ­ரிக்க பிரஜை ஒருவர் என்­னிடம் நாட்டை எவ்­வாறு கொண்டு செல்­கி­றீர்கள் என கேட்ட போது எங்­க­ளுக்கு புத்தி சொல்­லத்­தே­வை­யில்லை, எங்­க­ளது நாட்டில் புத்­தி­ஜீ­விகள் இருக்­கின்­றனர். எங்­க­ளது பிரச்­சி­னை­களை நாங்கள் தீர்த்துக் கொள்வோம் என கூறினேன்.

45 வருட அர­சியல் அனு­பவம் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்­குண்டு. அதே போன்று ராஜ­பக் ஷ குடும்­பத்­திற்கு 75 வருட அர­சியல் ஈடு­பாடு உண்டு. இந்த அனு­ப­வங்­களை கொண்டு இந்த நாட்டை கொண்டு செல்­கின்றோம்.

அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி

எமது தூர நோக்கு சிந்­தனை மஹிந்த சிந்­த­னை­யாகும். இந்த நாட்டின் கௌர­வத்­துக்கு கரி பூசி நாட்­டிற்கு அப­கீர்த்­தியை கொண்டு வர சிலர் முயற்­சிக்­கின்­றனர்.

இலங்­கையில் முஸ்­லிம்கள் தமது மத கட­மை­களை செய்­வ­தற்கு தடை­யுள்­ளது என பிர­ச­சாரம் செய்­யப்­ப­டு­கின்­றது. அண்­மையில் இலங்கை வந்த வெளி­நாட்டு முஸ்லிம் பிர­முகர் ஒருவர் அவர் தங்­கி­யி­ருந்த போது தொழு­கைக்­கான பாங்கு சொல்லும் சத்தம் கேட்­டுள்­ளது.

அப்­போது அவர் வெளி­நாட்டில் இலங்­கைக்கு எதி­ராக செய்­யப்­படும் பிர­சாரம் பொய் என்­ப­தையும் இங்கு அனை­வ­ருக்கும் பூரண மத சுதந்­தி­ர­முண்டு என­ப­தையும் அறிந்­த­துடன் அதை என்னிடம் கூறினார். இங்கு அனை­வரும் தமது மதக் கட­மை­களை மேற் கொள்­வ­தற்­கான அனைத்து சுதந்­தி­ரமும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

கொழும்பில் சேரிப்­ப­கு­தியில் வாழ்ந்த மக்களுக்காக 20,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 500 வீடுகள் அமைக்கப்பட்டு கூடுதலான வீடுகள் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன் மூன்றாவதாக தான் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கொழும்­பி­லி­ருந்து முஸ்­லிம்­க­ளையோ, தமி­ழர்­க­ளையோ நாம் துரத்த வில்லை கிழக்கு மாகா­ணத்தில் அனைத்து வளங்­க­ளு­முண்டு . கிழக்கு மாகா­ணத்தில் சுற்­று­லாத்­துறை உட்­பட அனைத்து அபி­வி­ருத்­தி­களும் மேற் கொள்­ளப்­பட்டு வருகின்றன என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply