உலக கோப்பை கொடிகளை பயன்படுத்த வங்காளதேசத்தில் தடை

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. இதற்கு கிரிக்கெட்டை நேசிக்கும் வங்காளதேசமும் விதிவிலக்கல்ல. வங்காளதேசத்தில் பல வீடுகளின் மேற்பகுதியில் பிரேசில் அல்லது அர்ஜென்டினா நாட்டு கொடியை ரசிகர்கள் பறக்கவிட்டுள்ளனர். இது அங்குள்ள உள்ளூர் அரசு அதிகாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அன்னிய நாட்டு கொடிகளை வங்காளதேசத்தில் பறக்கவிடுவது நமது தேசிய கொடியை அவமதிக்கும் செயலாகும் என்றும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் தேசிய கொடியை வீடுகளில் பறக்கவிட்டு இருப்பவர்கள் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் அரசு அதிகாரிகள் சில இடங்களில் நேரடியாக களம் இறங்கி உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளின் கொடிகளை அகற்றும் நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply