இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறுவோரே கைது வேறு நாட்டின் எல்லைக்குள் சென்று எவரையும் கைது செய்யவில்லை : பிரிகேடியர் ருவன் வணிகசூரிய

இலங்கை கடற்படை யினர் தமிழக மீனவர்களை தேவையற்ற வகையில் கைது செய்வதுடன் அவர்களது விடயத்தில் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்வதாக கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இலங்கை கடற்படையினர் வேறு நாட்டின் கடற்பரப்பிற்குள் சென்று எவரையும் கைது செய்வதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்புடன் தொடர்புடைய சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பி ட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது. இதன் போது பிரிகேடியர் மேலும் விளக்கமளிக்கையில்:

இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கை தொடர்பில் இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற விதத்தில் நடந்து கொள்வதாக சில ஊடகங்கள், இணைய தளங்கள் பாரியளவில் தவறான பிரசாரங்களை முன்னெடுத்துச் செல்கின்றன. அவற்றில் எந்தவித உண்மையும் கிடையாது. அவற்றை முற்றாக மறுக்கின்றேன். ஏனெனில், இலங்கையின் கடற்பரப் பையும் சர்வதேச கடல் எல்லையையும் பாதுகாக்க வேண்டியது கடற்படையின் முக்கிய பொறுப்புக்களில் ஒன்றாகும்.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பத்திலும் சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவதையும் தடுக்க வேண்டியது கடற்படையின் பொறுப்பாகும். அத்துமீறி நுழைவது சட்டப்படி குற்றமாகும். இதன் போது சட்டத்தை நிலைநாட்டவேண்டியது கடற்படையின் பொறுப்பாகும். இதன் அடிப்படையிலேயே அவ்வாறானவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக உரிய முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்வதை மனிதாபிமானமற்ற முறை என்று எவரும் கூற முடியாது. மாறாக இதனை சில ஊடகங்கள் தவறாக பிரசாரம் செய்ய முயற்சிக்கின்றன என்றார். கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய, இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர, விமானப் படைப் பேச்சாளர் வின்ங் கொமாண்டர் கிஹான் செனவிரத்ன ஆகியோர் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர். உங்கள் எல்லோருக்கும் மும்மணிகளின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் இவ்வாறு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply