கொலை செய்யுமுன் அமெரிக்க நிருபரின் குடும்பத்துக்கு கடிதம் எழுதிய தீவிரவாதிகள்
பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த அமெரிக்க நிருபர் ஜேம்ஸ் போலேயை, தலையை துண்டித்து படுகொலை செய்யுமுன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், அவரது குடும்பத்துக்கு ஒரு இ–மெயில் (மின்னணு கடிதம்) அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில், ‘‘மற்ற நாட்டு அரசாங்கங்கள் போல பணப்பரிமாற்றத்தின் மூலம் உங்கள் ஆட்களை விடுதலை செய்வது தொடர்பாக பேச்சு நடத்த பல வாய்ப்புகளை தந்தோம். உங்கள் காவலில் உள்ள எங்கள் சகோதரி டாக்டர் அபியா சித்திக் போன்ற முஸ்லிம் கைதிகளை பதிலுக்கு விடுதலை செய்ய கூறினோம். ஆனால் இதில் எல்லாம் உங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி விட்டீர்கள். படை பலத்தை பிரயோகிப்பது தவிர்த்து பிற வழிகளில் முஸ்லிம்கள் விவகாரத்தை கையாள உங்களுக்கு விருப்பம் இல்லை. எனவே போலேயை கொன்று விடுவோம்’’ என கூறப்பட்டுள்ளது.
இந்த கடித விவரத்தை போலே குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவர் வேலை செய்த ‘குளோபல் போஸ்ட்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply