விமானியை கொன்றால் சிறையில் இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்வோம்: ஜோர்டான் மிரட்டல்

ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் ஜோர்டான் விமானி முயாத் அல்–கசீஸ்பே என்பவரும் சிக்கியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போது அவரது எப்–6 ரக விமானம் தரையில் விழுந்தது.அதில் இருந்து உயிருடன் தப்பிய அவரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறை பிடித்து பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர்.அவரை விடுதலை செய்ய ஜோர்டான் சிறையில் இருக்கும் ஐ.எஸ்.பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுவிக்க வேண்டும் என கெடு விதித்து இருந்தனர்.

ஆனால், விமானி அல்–கசீஸ்பே உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை தரும்படி தீவிரவாதிகளிடம் ஜோர்டான் அரசு கேட்டது.அதற்கு தீவிரவாதிகள் இதுவரை பதில் எதுவும் தரவில்லை. இந்த நிலையில் ஜப்பான் பிணைக் கைதி கென்ஜி கோடோ படுகொலை செய்யப்பட்டார். ஆனால், ஜோர்டான் விமானி அல்–கசீஸ்பே குறித்து எந்த தகவலும் இல்லை.இதனால் ஜோர்டான் அரசு பதட்டம் அடைந்துள்ளது. இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விமானி அல்–கசீஸ்பேவை விடுதலை செய்ய வேண்டும்.மீறி அவரை கொலை செய்தால் ஜோர்டான் சிறையில் இருக்கும் பெண் தீவிரவாதி சஜிதா உள்ளிட்ட அனைத்து ஐ.எஸ்.தீவிரவாதிகளையும் கோர்ட்டில் நிறுத்தி மரண தண்டனை விதிப்போம். பின்னர் அனைவரையும் கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.இந்த தகவலை ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கும் அனுப்பியுள்ளனர். மேலும் விமானி உயிருடன் இருக்கிறாரா? என்பதற்கான ஆதாரத்திகாக இன்னும் காத்திருப்பதாகவும் ஜோர்டான் அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply