40 நாட்களில் மஹிந்தவிடம் நாட்டை மீள ஒப்படைப்போம்!: தேசிய சுதந்திர முன்னணி

இன்னும் 40 நாட்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நாட்டை ஒப்படைக்க உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. “தாய் நாடு ஆபத்தில்ää மஹிந்தனை அழைப்போம்” என்ற தொனிப் பொருளில் கிராமங்கள் தோறும் சென்று பத்தாயிரம் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபை பேச்சாளர் பியசிறி விஜேயநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை தோற்கடித்து நாற்பது நாட்களில் மீளவும் ஆட்சி அதிகாரத்தை மஹிந்தவிடம் ஒப்படைப்போம். மத்திய வங்கியில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன, பங்குச் சந்தையில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

நாட்டை மீட்டெடுக்க வேண்டுமாயின் மஹிந்த ராஜபக்சவை மீள அழைக்க வேண்டும்.

சுதந்திரத்தின் பின்னர் நாட்டை கட்டியெழுப்ப நேரடியாக பங்களிப்பினை வழங்கிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்சவேயாகும்.

மேற்குலக சக்திகளின் நடவடிக்கைகளுக்கு அடி பணியாது செயற்பட்ட ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவேயாகும்.

நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களுடன் ஏனைய நாடுகளுடன் நட்புறவு பேணப்பட்டு வந்தது.

எனினும், இந்த அரசாங்கம் அந்த அனைத்து நடவடிக்கைகளையும் சீர்குலைத்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதேச்சாதிகார போக்கில் செயற்பட்டு வருவதாக பியசிறி விஜயநாயக்க குற்றம் சுமத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply