இலங்கையில் பல்வேறு தலைவர்களை சந்திக்கவுள்ள மோடி

இலங்கை வந்­துள்ள இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி அரசியல் தலை­வர்கள் உயர்மட்ட அதி­கா­ரிகள் பாதிக்­கப்­பட்ட மக்கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார். அத­னை­ய­டுத்து மாலை 3.15 மணிக்கு பிர­தமரின் நரேந்­திர மோடி இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரை­யாற்­றுவார். இது மிக முக்­கி­ய­மான நிகழ்வு என்று குறிப்­பிட முடியும். ஆனால் இந்­தியப் பிர­தமரின் இலங்கை பாரா­ளு­மன்ற உரை­யா­னது மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமையும். இதற்­காக பாரா­ளு­மன்றம் வெள்ளிக்­கி­ழமை விசே­ட­மாக கூட­வுள்­ளது. அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­ப­களும் குறித்த விசேட அமர்­வுக்கு வரு­கை­த­ரு­மாறு அழைக்­கப்­பட்­டுள்­ளனர்.

எம்.பி.க்களுடன் சந்­திப்பு

பாரா­ளு­மன்ற உரைக்குப் பின்னர் இந்­தியப் பிர­தமர் மோடி, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் குறு­கிய நேர சந்­திப்­பினை மேற்­கொள்வார். பாரா­ளு­மன்­றத்தில் இந்­தியப் பிர­த­ம­ருக்கு தேநீர் விருந்­து­ப­சாரம் அளிக்­கப்­ப­ட­வுள்­ள­து.

அதன்­பின்னர் இந்­திய அமை­திப்­படை நினை­வி­டத்­துக்குச் செல்வார்.அங்கு அவர் உயிர்­நீத்த இந்­திய இரா­ணுவத்­தி­ன­ருக்கு அஞ்­சலி செலுத்­துவார்.

வர்த்­தக சம்­மே­ளன சந்­திப்பு

இன்று மாலை இலங்கை வர்த்­தக சம்­மே­ள­னத்­தினால் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்ள வர்த்­தக மாநாட்டில் பிர­தமர் மோடி கலந்­து­கொள்வார். கடந்த சில வரு­டங்­க­ளாக இந்­தி­யா­வி­னதும் இலங்­கை­யி­னதும் வர்த்­தக உறவு மிகப்­பெ­ரிய வளர்ச்­சியை அடைந்­துள்­ளது. வர்த்­தக மாநாட்டில் இந்­தியப் பிர­தமர் உரை­யாற்­றுவார். இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் எவ்­வாறு வர்த்­தக பொரு­ளா­தார முத­லீட்டு உத­வி­களை மேம்­ப­டுத்­து­வது என்­பது தொடர்­பாக இதன்­போது கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெறும்.

கூட்­ட­மைப்பு சந்­திப்பு

வர்த்­தக சந்­திப்­பை­ய­டுத்து அர­சியல் கட்­சி­க­ளு­ட­னான சந்­திப்பு நடை­பெறும். அந்த சந்­திப்­பு­களில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்பு மிக முக்­கி­ய­மா­ன­தாகும். அதன்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் பல்­வேறு விட­யங்­களை இந்­திய பிர­த­மரின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ர­வுள்­ளனர். காணி விவ­காரம் அர­சியல் தீர்வு விடயம் தடுத்து வைக்­க­ப்­பட்­டுள்­ள­வர்­களின் விடு­தலை காணாமல்போனோர் பிரச்­சினை மற்றும் அர­சியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் என்­பன குறித்து கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­­பந்தன் இந்­திய பிர­த­ம­ருக்கு எடுத்­து­ரைப்பார்.

நிமல் சிறி­பா­ல­வுடன் சந்­திப்பு

கூட்­ட­மைப்­பி­ன­ருட­னான சந்­திப்­பை­ய­டுத்து எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் சிறி பா­ல டி சில்­வாவை இந்­தி­யப்­பி­ர­தமர் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­துவார். இதன்­போது அர­சியல் ரீதி­யான பல விட­யங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. குறிப்­பாக புதிய அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத்­திட்­டத்­துக்கு எதிர்க்­கட்சி ஆத­ரவு வழங்­கு­வது குறித்து எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் சிறி­பால டி. சில்வா இந்­தியப் பிர­த­ம­ருக்கு விளக்­க­ம­ளிப்பார்.

சந்­தி­ரி­கா­வுடன் சந்­திப்பு

அதன் பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுடன் கொழும்பில் இந்­திய பிர­தமர் பேச்­சு­வார்த்தை நடத்­துவார். இதன்­போது பல விட­யங்கள் குறித்து பேச்சு நடத்­தப்­படும். எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை சந்­திப்­பாரா இல்­லையா என்­பது குறித்து இது­வரை உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை்.
இன்றைய தினத்தில் இறுதி நிகழ்­வாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இரவு விருந்­து­ப­சாரம் நடை­பெறும். அதில் பிர­தமர் மோடி கலந்­து­கொள்வார். அத்­துடன் முதல்நாள் நிகழ்­வுகள் முடி­வ­டையும்.

அநு­ரா­த­புரம்

இரண்டாம் நாள் சனிக்­கி­ழமை தினத்­தன்று நிகழ்­வுகள் முழு­மை­யாக கொழு­ம்­புக்கு வெளியில் நடை­பெறும். முத­லா­வ­தாக மோடி அநு­ரா­த­பு­ரத்­துக்கு விஜயம் செய்வார். அங்கு சிறி­மஹா போதியில் வழி­பா­டு­களை மேற்­கொள்வார். மஹிந்த மற்றும் சங்­க­மித்தை ஆகியோர் வருகை தந்த புனித இட­மாக அநு­ரா­த­புரம் காணப்­ப­டு­கின்­றது.

தலை­மன்னார் விஜயம்

அதன் பின்னர் இந்­தியப் பிர­தமர் மோடி தலை­மன்­னா­ருக்கு விஜயம் செய்வார். தலை­மன்னார் என்­பது வர­லாற்று ரீதி­யா­கவே இந்­தி­யா­வுடன் தொடர்­பு­பட்ட மிக அருகில் உள்ள பிர­தே­ச­மாகும். இந்­தியப் பிர­தமர் மோடி தலை­மன்னார் ரயில் நிலை­யத்தை திறந்து வைப்பார். தலை­மன்னார் மடுரோட் ரயில் சேவை­யையும் இந்­தியப் பிர­தமர் திறந்து வைப்பார். இந்த ரயில் பாதையை இந்­திய நிறு­வனம் நிர்­மா­ணித்­தமை விசேட அம்­ச­மாகும்.

யாழ்.விஜயம்

அந்த நிகழ்­வு­களின் பின்னர் தலை­மன்­னா­ரி­லி­ருந்து இந்­தியப் பிர­தமர் மோடி யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்வார். யாழ்ப்­பா­ணத்தில் இரண்டு முக்­கிய நிகழ்­வுகள் உள்­ளன. முத­லா­வ­தாக யாழ்ப்­பாண கலா­சார நிலை­யத்தை நிர்­மா­ணி­ப்­ப­தற்­கான அடிக்கல் இந்­திய பிர­த­ம­ரினால் நாட்­டப்­படும்.

ஆளுநர் சந்­திப்பு

அதன் பின்னர் வடக்கு ஆளு­ந­ரினால் வழங்­கப்­படும் பக­லு­ணவு விருந்து­ப­சா­ரத்தில் கலந்­து­கொள்வார். யாழ்ப்­பா­ணத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சில வீடு களை பயனாளிகளுக்கு இந்திய பிரதமர் கையளிப்பார். இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்த வீடுகள் கையளிக்கப்படும். இதுவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.

மு.கா. சந்திப்பு

கொழும்பில் அவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் பி்ரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்துவார்.

இ.தொ.கா. சந்திப்பு

அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் இந்திய வம்சாவளி தலைவர்கள் உள்ளிட்ட பலரை அவர் சந்தித்து பேச்சு நடத்துவார். அதன் பின்னர் சனிக்கிழமை இரவு இலங்கைக்கான இந்திய தூதுவரின் இரவு விருந்துபசாரத்தில் அவர் பங்கேற்பார். அதன் பின்னர் இந்தியப் பிரதமர் புதுடில்லி நோக்கி பயணிப்பார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply