முதல் இந்தியர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பாபி ஜிண்டால்
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய அமெரிக்கரான பாபி ஜிண்டால் அறிவித்துள்ளார். அமெரிக்க நாட்டில் அடுத்த ஆண்டு (2016) நவம்பர் 8-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதி ஒபாமா, இருமுறை பதவி வகித்துவிட்ட நிலையில் மூன்றாவது முறையாக போட்டியிட இயலாது. எனவே ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கான முதல்கட்ட பணிகளில் அவர் இறங்கி உள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதிகள் ஜார்ஜ் எச். டபிள்யு புஷ் மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ் சகோதரருமான ஜெப் புஷ் போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய அமெரிக்கரான பாபி ஜிண்டால்(44), போட்டியிடப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
குடியரசு கட்சியின் சார்பாக அதிபர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டு காத்திருக்கும் ஜெப் புஷ் உள்ளிட்ட 11 பேரை பின்னுக்குத்தள்ளி பாபி ஜிண்டால் முன்னேறி வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் களம் இறங்கும்பட்சத்தில், அந்த நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெயரையும், புகழையும் பாபி ஜிண்டால் தட்டிச்செல்வார்.
தற்போது இவர் அங்குள்ள லூசியானா மாகாணத்தின் கவர்னராக உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply