இந்தியாவில் பிச்சை எடுத்து வாழும் 6½ லட்சம் குடும்பங்கள்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் குடும்பங்களின் வாழ்வாதாரம், சொத்து, கல்விநிலை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை சமூக, பொருளாதார, சாதி கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. கிராமப்புறங்களில் 17 கோடியே 59 லட்சம் குடும்பங்களை இந்த கணக்கெடுப்புக்கு உட்படுத்தியதில் 0.37 சதவீதம் குடும்பங்கள், அதாவது 6 லட்சத்து 68 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம், பிச்சையெடுப்பதுதான் என்றும், பிச்சையெடுத்துத்தான் அவை வாழ்கின்றன என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.

குப்பை பொறுக்கி அதன் மூலம் கிடைக்கிற வருமானத்தைக்கொண்டு 4 லட்சத்து 8 ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்களின் வாழ்வாதாரம், குப்பை பொறுக்குவது மட்டும்தான்.

இந்த சர்வேயில் வெளியாகி உள்ள பிற முக்கிய தகவல்கள்:-

* 51 சதவீதம் குடும்பங்கள், சாதாரண கூலி வேலை செய்துதான் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றன.

* 1 கோடியே 9 லட்சத்து 11 ஆயிரத்து 196 குடும்பங்கள், உடல் ஊனமுற்ற உறுப்பினரை கொண்டுள்ளன.

* 6 லட்சத்து 79 ஆயிரத்து 128 பேர் உடல் ஊனமுற்ற நிலையில், பிறர் உதவியின்றி தனிமையில் வாழ்கின்றனர்.

இது 2011-ம் ஆண்டு புள்ளிவிவரம் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply