இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இரவு முழுவதும் துப்பாக்கி சூடு

காஷ்மீர் எல்லையையொட்டி இந்திய- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எல்லையில் அமைதி நிலவும்போது எல்லாம் பாகிஸ்தான் ராணுவம் போர் ஒப்பந்தத்தை மீறி அத்துமீறல்களில் ஈடுபட்டு பதட்டத்தை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளது. நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. வடக்கு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அர்னியா செக்டரில் நேற்று இரவு முழுவதும் பாகிஸ்தான் ராணுவம் 6 இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து கடும் துப்பாக்கி சூடு நடத்தியது. துப்பாக்கியுடன் சிறிய வகை மோட்டார் குண்டுகளை (ராக்கெட் லேஞ்சர்ஸ்) வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். இந்திய ராணுவ நிலையை குறிவைத்து சுமார் 25 முதல் 30 ரவுண்ட் வரையில் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதியும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ். புரா செக்டாரில் இரண்டு இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply