கூட்டமைப்பை ஒரு பலமிக்க ஒரு மக்கள் இயக்கமாக ஒரு சக்தியாக மாற்ற வேண்டும் : சிவசக்தி ஆனந்தன்
யுத்தம் நடைபெற்று ஆறு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தமிழ் மக்களுடைய நிலங்கள் வடக்கு கிழக்கில் பல ஆயிரக்கணக்கான காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளது. அவற்றை மக்களிடம் ஒப்படைக்கவில்லை. நீண்ட காலமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளுடைய விடுதலை, காணாமல் போனோரை கண்டுபிடிப்பது தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக இந்த தேர்தலிலே தமிழ் மக்களிடமிருந்து ஓர் ஆணையை பெற்றிருந்தோம்.
தமிழ் மக்களுடைய ஆணையின் பிரகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பானது அந்த கொள்கைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டிய பெரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஆகவே இனப்பிரச்சனைக்கான ஒரு நிரந்திர அரசியல் தீர்வைக் காண்பதற்கு எங்களுக்கு இருக்கக்கூடிய ஒரு இறுதிச் சந்தர்ப்பம் செப்டெம்பர் 30 திகதி ஐநாவின் அறிக்கை ஒன்று வெளிவர இருக்கிறது.
அந்த அறிக்கையானது நாங்கள் எதிர்பார்க்கின்ற சர்வதேச விசாரணையோடு உள்ளடக்கிய அறிக்கையாக வெளிவருமா இல்லையா? அல்லது அப்படி ஒரு சர்வதேச விசாரணையோடு வெளிவருவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அதற்கான காத்திரமான வேலைகளை முன்னெடுக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான கௌரமான ஒரு அரசியல் தீர்வு கிடைக்கிற வரைக்கும்,நாங்கள் எங்களுடைய போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.
அந்தவகையில் வன்னி மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணை மற்றும் பொறுப்புகளிலிருந்து ஒரு துளியளவும் நாங்கள் விலகமாட்டோம். கடந்த கால எங்களுடைய செயல்பாடுகளின் ஊடாக நாங்கள் நிரூபித்திருக்கின்றோம். வெறுமனமே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ மாகாணசபை உறுப்பினர்களாகவோ இருப்பது மட்டுமல்ல.
எங்கெல்லாம் அநீதிகள் நடக்கப்படுதோ எங்கெல்லாம் தவறுகள் நடக்கப்படுதோ அதுக்கெதிராக குரல் கொடுக்கக் கூடிய பலத்தையும் சக்தியையும் நீங்கள் எங்களுக்கு வழங்கியிருக்கிறீர்கள். ஆகவே எங்களைப் பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஒரு பலமிக்க ஒரு மக்கள் இயக்கமாக ஒரு சக்தியாக மாற்ற வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது. என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply