சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா ஆணையாளருக்கு சம்பந்தன் கடிதம்
இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, ஐ.நா ஆணையாளருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடிதமொன்றை எழுதியுள்ளார். போர்க்குற்ற விசாரணை அறிக்கை தற்போது இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக இல்லையென பல ஊகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஐ.நா ஆணையாளரிடம் தாம் நேரில் சென்று தமிழர்களின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் முயற்சியில் குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
கூட்டமைப்யை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜெனிவா சென்றுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு, இதனை ஐ.நா ஆணையாளரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கி அரசாங்கம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியபோது, அது ஐ.நா விசாரணையை குறிவைத்து நிகழ்த்தப்பட்டதாக பல செய்திகள் வெளியாகின.
எனினும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சர்வதேச பொறிமுறையின் கீழ் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பதில், கூட்டமைப்பு தளராத நிலைப்பாட்டை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply