இலங்கை குறித்த விசாரணை அறிக்கை பாரதூரமானது : ஐ.நா
இலங்கை குறித்த விசாரணை அறிக்கை பாரதூரமான தன்மையுடையது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30ம் அமர்வுகளின் ஆரம்ப உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட ஆறு ஆண்டுகளுக்கு இலங்கையில் இடம்பெற்ற யுத்தமானது பாரதூரமானது எனவும், பாரியளவிலான உரிமை மீறல்கள் இடம்பெற்றதுடன், பொதுமக்கள் இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த குற்றச் செயல்கள் தொடர்பிலான பொறுப்புகூறுதல் அவசிமானது என்பதே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் நிலைப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை வெளியிட உள்ளதாகவும் குறித்த தினத்தில் தமது பரிந்துரைகளையும் வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதியாக பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்ட மைத்திரிபால சிறிசேன மனித உரிமை விவகாரங்களில் காண்பிக்கும் கரிசனை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply