எகிப்து பாதுகாப்பு படையினரால் தவறாக மெக்சிகோ சுற்றுலா பயணிகள் கொலை
எகிப்து பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் என தவறு தலாக நினைத்து சுற்றுலா பயணிகள் சென்ற வாக னங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் மெக்சிகோ நாட்ட வர்கள் உட்பட 12 பேர்; கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். எகிப்து பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை கொண்ட கூட்டுப் படையினர் லிபிய நாட்டு எல்லையை ஒட்டிய நாட்டின் மேற்கு பாலைவனப் பகுதியில் நேற்று முன்தினம் ஆயுததாரிகளை துரத்திச் சென்றபோதே தவறாக சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள் ளனர்.
இதில் நான்கு சக்கர வாகனங்கள் நான் கின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக எகிப்து உள்துறை அமைச்சு விபரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் எல்லை மீறி ஏன் ஊடுரு வினார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தப் பட்டு வருவதாக உள்துறை அமைச்சின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இரு மெக்சிகோ நாட்ட வர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. கவ லைக்கிடமான சம்பவம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் மெக் சிகோ ஜனாதிபதி என்ட்ரிக் பெனா நிடோ, முழுமையான விசாரணைக்கு வலியுறுத்தி யுள்ளார்.
குறித்த சுற்றுலா வாகனத் தொடரணி அனுமதிப்பத்திரம் அற்ற கார் வண்டிகளுடன் எல்லை மீறி பயணித்திருப்பதாக எகிப்து சுற்றுலா அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மேலும் ஐந்து மெக்சிகோ நாட்டவர்கள் மருத்துவமனையில் கவ லைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு எகிப்தில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சி மூலம் இஸ்லாமியவாதியான ஜனா திபதி மொஹமட் முர்சி பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து அங்கு இஸ்லாமிய ஆயுததாரிகளின் தாக்குதல் அதிகரித் துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply