நாட்டில் தற்போது பொலிஸ் ஆட்சி மக்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை : கோத்தபாய

kottaநாட்டில் தற்போது பொலிஸ் ஆட்சியே நடைபெற்று வருவதாகவும் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் தற்போதைய அரசாங்கத்தில் நடைபெறவில்லை எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்காக கோட்டாபயவின் பெயரை முன்மொழிவதாக, அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ள நிலையில் இந்த கருத்து தொடர்பில் தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.எனினும் அவ்வாறானதொரு யோசனை இதுவரை கிடைக்கப் பெறவில்லை என, அக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க, ராஜபக்ஷக்களுடன் இணைந்து செயற்பட தான் தயாரில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

நேற்று இரவு அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், கட்சிகளுடன், இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இந்த விடயத்தைக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply