ஆஸ்திரேலியாவில் ஜூலை 2-ந் தேதி பொதுத்தேர்தல் – இந்திய வம்சாவளியினர் 5 பேர் போட்டி

austaliyaஆஸ்திரேலியா பாராளுமன்றத்தின் 150 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், 76 இடங்களை கொண்ட செனட் சபைக்கும் ஒரே நேரத்தில் ஜூலை மாதம் 2-ந் தேதி தேர்தல் நடக்கிறது. 1987-க்கு பின்னர் இரு சபைகளும் ஒரே நேரத்தில் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 5 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் 2 பேர் பெண்கள் ஆவார்கள். கிரீன்ஸ் கட்சி சார்பில் இந்திய வம்சாவளி சீக்கியப்பெண் அலெக்ஸ் பாதலும் (வயது 51), தொழிற்கட்சி சார்பில் பிஜி இந்தியப்பெண் லிசா சிங்கும் (43) போட்டியிடுகிறார்கள்.

இந்தியாவில் இருந்து 1989-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறிய சசி பட்டியும், பெங்களூரை சேர்ந்த இந்திய பெற்றோருக்கு பிறந்த ஆஸ்திரேலியர் கிறிஸ் காம்பியனும் தொழிற்கட்சி சார்பில் களம் இறங்கி உள்ளனர்.

1994-ம் ஆண்டு இந்தியாவின் பரிதாபாத்தில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய மொகித்குமார் (39), லிபரல் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். தனது கடின உழைப்பால்தான் தனக்கு பிரதமர் டர்ன்புல்லின் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைத்துள்ளதாக மொகித்குமார் குறிப்பிட்டார். கிறிஸ் காம்பியன், “எனது 16 வயதில் நான் தொழிற்கட்சியில் சேர்ந்து விட்டேன். அது சமூக நீதி மற்றும் நேர்மையான கட்சி” என கூறினார்.

இந்திய வம்சாவளியினர் 5 பேரில் எத்தனை பேர் வெற்றி பெறப்போகிறார்கள், ஆஸ்திரேலியா பாராளுமன்றத்திற்கு செல்லப்போகிறார்கள் என்பது ஜூலை 3-ந் தேதி தெரிந்து விடும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply