100 பாதயாத்திரைகள் சென்றாலும் அரசுக்கு பாதிப்பில்லை

Thumintha-ஒரு பாதயாத்திரை அல்ல நுாறு பாதயாத்திரைகள் சென்றாலும் அரசாங்கத்துக்கோ, ஸ்ரீ.சு.கட்சிக்கோ எவ்வித பிரச்சினைகளுமில்லை எனத் தெரிவித்த ஸ்ரீ.சு.கட்சியின் செயலாளரும் விவசாய அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க பாதயாத்திரை செல்வதற்கான சுதந்திரத்தில் தலையிடப் போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்: பாதயாத்திரை செல்ல முயற்சிப்பவர்களுக்கும் ஸ்ரீ.சு. கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை.அவ்வாறு ஒரு பாத யாத்திரை அல்ல நுாறு பாதயாத்திரை சென்றாலும் இதனால் அரசாங்கத்துக்கோ ஸ்ரீ.சு.கட்சிக்கோ எவ்வித பாதிப்புகளுமில்லை.

 

நாம் பல பாதயாத்திரைகளை கண்டுள்ளோம் குறிப்பாக வெஸாக் ,பொஸன், இருவன் வெலிசாய இவ்வாறு பலவற்றை கண்டுள்ளோம்.இதன்மூலம் சாதனைகளும் புரிய முடியும். ஆனால் தனியாக பாதயாத்திரை சென்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

 

ஸ்ரீ.சு.கட்சியின் அனுமதியின்றி கட்சியின் பெயரை பாவித்து பாதயாத்திரை செல்வது சட்டப்படி குற்றம்.இவ்வாறு செல்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

 

உள்ளுராட்சி தேர்தலுக்காக நேர்முகப்பரீட்சைக்கு கடிதங்கள் அனுப்பியிருந்தோம். இதனை சில முன்னாள் உறுப்பினர்கள் காடைத்தனமாக கிழித்தெறிந்துவிட்டு ஊடக சந்திப்புளை நடத்துகின்றனர்.மக்களது வாக்குகளை கொள்ளையடித்துவிட்டு சேவை செய்யாதவர்களை விடுத்து கல்வி கற்ற மக்கள் செல்வாக்குள்ள சேவை செய்யக்கூடியவர்களை நாம் இம்முறை தெரிவு செய்யவுள்ளோம்.இது சம்மந்தமாக கட்சியின் மத்திய செயற்குழு முக்கிய தீர்மானம் எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply