15 மணித்தியால தாமதத்தால் பயணிகளுக்கு தலா 96,960 ரூபா நட்ட ஈடு வழங்கும் நிலையில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
விமான சேவைப் பணியாளரொருவரின் தாமதத்தால் ஃப்ராங்க்ஃபர்ட்டில் இருந்து srilanka airlankaகொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதமானது. ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான UL554 எனும் விமானம், நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு ஃப்ரங்க்ஃபர்ட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்கவிற்கான பயணத்தை ஆரம்பிக்கவிருந்தது.
இந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கிப் பயணிப்பதற்காக, 259 பயணிகள் தயாராகவிருந்தனர்.எனினும், விமானப் பணியாளரொருவர் வருகை தராமையால், விமானம் புறப்படுவதில் 15 மணித்தியால தாமதம் ஏற்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் இன்று பகல் அறிக்கையொன்றினூடாக அறிவித்தது.ஃப்ரங்க்ஃபர்ட் விமான நிலையம் இரவு நேரத்தில் மூடப்படுகின்றமையால், இன்று காலை 6.20 ற்கே விமானம் புறப்பட்டது.
வருகை தராத விமானப் பணியாளருக்குப் பதிலாக, கொழும்பிலிருந்து ஃப்ரங்க்ஃபர்ட் நோக்கிப் பயணித்த மற்றுமொரு விமானத்திலிருந்த விமானப் பணியாளர், விமான நிறுவனத்தின் சட்ட விதிமுறைகளுக்கமைய கடமையில் ஈடுபடுத்தப்பட்டார்.விமானம் தாமதமான நேரப்பகுதியில் பயணிகளுக்கு, உணவு மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாமதம் தொடர்பில் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ள விமான நிறுவனம், ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளுக்கு அமைய தாமதத்திற்காக பயணிகளுக்கு நட்ட ஈட்டைப் பெற்றுக்கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்கு விதிமுறைகளுக்கமைய, மூன்று மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் தாமதம் ஏற்படும் பட்சத்தில் விமான நிறுவனத்திடமிருந்து நட்ட ஈடு பெற்றுக்கொள்ள முடியும்.
ஐரோப்பாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத 3500 கிலோமீற்றர்களை விட அதிகத் தொலைவிலிருக்கும் நாடொன்றிற்கு மூன்று மணித்தியாலங்கள் தாமதம் ஏற்பட்டால், பயணிகளுக்கு தலா 600 யூரோக்களை நட்ட ஈடாக செலுத்த வேண்டும்.
ஃப்ரங்க்ஃபர்ட் மற்றும் கட்டுநாயக்கவிற்கு இடையிலான விமானப் பயண தூரம் 8087 கிலோமீற்றர்களாகும்.இதற்கமைய, பயணியொருவருக்கு 600 யூரோக்களை ஶ்ரீலங்கள் விமான நிறுவனம் செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய, ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் பயணியொருவருக்கு செலுத்த வேண்டிய தொகை 96,960 ரூபாவாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply