துருக்கியில் திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதலை ஐ.எஸ். அமைப்பு நடத்தியிருக்க கூடும்: துருக்கி ஜனாதிபதி எர்டோகன்
துருக்கியில் திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்கள் ஐ.எஸ். ஜிகாதி அமைப்பு ஆக இருக்க கூடும் என துருக்கியின் ஜனாதிபதி ரீசெப் டய்யீப் எர்டோகன் இன்று கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில், அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மதபோதகர் பெதுல்லா குலென் குழுவினருக்கும், குர்தீஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு (பி.கே.கே.) மற்றும் டேயீஷ் (ஐ.எஸ்.) அமைப்பினருக்கும் இடையே ஒரு வேற்றுமையும் இல்லை என கூறியுள்ளார்.
கடந்த ஜூலையில் நடந்த ராணுவ புரட்சியில், துருக்கி அரசை கவிழ்க்கும் முயற்சியில் மதபோதகர் குலென் ஈடுபட்டார் என டய்யீப் வெளிப்படை தன்மையுடன் குற்றம் சாட்டினார். இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. துருக்கியின் காஜியன்டெப் பகுதியில் இன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலை ஐ.எஸ். அமைப்பு நடத்தியிருக்க கூடும் என்றும் டய்யீப் கூறி உள்ளார்.
அவர் கூறும்பொழுது, எங்களை தாக்கியவர்களுக்கு எங்கள் நாடு வைத்திருக்கும் ஒரே செய்தி, நீங்கள் வெற்றி பெற போவதில்லை என்பதேயாகும் என கூறினார்.
கடந்த ஒரு மாதத்தில் பாதுகாப்பு படையினர் மீது பி.கே.கே. அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 70 பேர் பலியாகியுள்ளனர் என எர்டோகன் கூறியுள்ளார். காஜியன்டெப் போன்ற தாக்குதல்களின் நோக்கம் ஆனது துருக்கியில் உள்ள அராபியர்கள், குர்துக்கள் மற்றும் துருக்கியர்கள் ஆகியோரிடையே பிரிவினையை விதைக்க வேண்டும் என்ற வகையிலானது.
அதனுடன் பூர்வகுடி மக்கள் மற்றும் மத அடிப்படையிலான மக்களிடம் சட்டவிரோத முறைகளை பரப்பும் நோக்கம் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். காஜியன்டெப் தாக்குதலினால் துருக்கி சோர்ந்து விடாமல் அதற்கு பதில் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் என அவர் கூறியுள்ளார். பி.கே.கே. அமைப்புக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் எர்டோகன் வலியுறுத்தி உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply