இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை மீனவர்கள் குழு 25-ந்தேதி இந்தியா வருகிறது

meenavarஇரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இலங்கை மீனவர்கள் குழு 25-ந்தேதி (வியாழக்கிழமை) இந்தியா வருவதாக அந்த நாட்டு மீன்வளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.மீனவர் பிரச்சினைதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி அந்த நாட்டு கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகி சிறைப்பிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதைப்போல தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்களும் தாக்குவதுடன், மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்துகின்றனர்.

 

பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இரு நாட்டு அரசுகளும் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.12 பேர் குழுஇந்தநிலையில் இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை மீனவர்கள் குழு ஒன்று 25-ந்தேதி (வியாழக்கிழமை) இந்தியா வர உள்ளதாக அந்த நாட்டு மீன்வளத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டு உள்ளது. இதற்காக இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் அடங்கிய 12 பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்வதற்காக இலங்கை மீன்வளத்துறை மந்திரி மகிந்த அமரவீரவும், வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரவும் அடுத்த மாதம் (செப்டம்பர்) இந்தியாவுக்கு வருகை தர இருப்பதாகவும் கூறப்படுகிறது.மந்திரியின் குற்றச்சாட்டுஇதற்கிடையே யாழ்ப்பாணத்தில் நேற்று பல்வேறு மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசிய மகிந்த அமரவீர, இருநாட்டு மீனவர் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் தலையிட்டு பிரச்சினையை சிக்கலாக்கி இருப்பதாக குற்றம் சாட்டினார். இதனால்தான் இந்த பிரச்சினையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் கையாளுவதாகவும், இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் எனவும் அவர் கூறினார்.தமிழக மீனவர்களின் 130 படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை திருப்பித்தராமல் இருக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்திய அமரவீர, தங்கள் மீனவர்களின் நலன்களே முக்கியம் எனவும், தங்கள் கடல் வளத்தை இந்திய மீனவர்கள் கொள்ளையடிப்பதை அனு மதிக்கமாட்டோம் என்றும் தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply