வடகொரியாவின் மிரட்டலுக்கு மத்தியில் தென்கொரியா-அமெரிக்கா ராணுவ பயிற்சி

Korea கொரிய தீபகற்ப பகுதியில் தென்கொரியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக வடகொரியா விளங்கி வருகிறது. அந்த நாட்டின் துணை தூதராக லண்டனில் பணியாற்றி வந்த தை யாங் ஹோ என்பவர், தனது பணியை விட்டு விலகி கடந்த வாரம் தென்கொரியாவில் தஞ்சமடைந்தார். இதை அறிவித்த தென்கொரிய அதிபர் பார்க் ஜியுன்-ஹை, வடகொரியா அதிபர் கிம்மின் ஆட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதாகவும், வடகொரியா மேல்மட்டக்குழுவில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

இந்த சம்பவம் வடகொரியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து நேற்று வழக்கமான வருடாந்திர போர்ப்பயிற்சியை தொடங்கி உள்ளன. இதில் தென்கொரிய ராணுவத்துடன், 25 ஆயிரம் அமெரிக்க வீரர்களும் கலந்து கொண்டனர். இது வடகொரியாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்த ராணுவ பயிற்சி, தங்கள் நாட்டில் ஊடுருவும் நடவடிக்கை என ஏற்கனவே கூறியிருந்த வடகொரியா, இந்த பயிற்சியை மேற்கொண்டால் நாங்கள் முதலில் தாக்குதல் நடத்துவோம் என மிரட்டலும் விடுத்து இருந்தது. எனவே அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சியால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply