பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தளபதியாக குவாமர் ஜாவேத் பஜ்வா நியமனம்
பாகிஸ்தான் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பாதி காலத்திற்கும் மேலாக, அதாவது 69 ஆண்டுகள் ராணுவ ஆட்சியே நடைபெற்றுள்ளது. பாகிஸ்தானின் சக்திமிக்க நபர் என்று விவாதிக்கக்கூடிய அளவிற்கு அந்நாட்டின் ராணுவ தளபதி கருதப்படுகிறார். அதனால், ராணுவ தளபதி நியமனம் பாகிஸ்தானில் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் தற்போதைய ராணுவ தளபதி ரகீல் ஷெரீப் பதவிக்காலம் நவம்பர் 29-ம் தேதியுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. இதையடுத்து புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் குவாமர் ஜாவேத் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார். ரகீல் ஷெரீப் செவ்வாய்க்கிழமை முறைப்படி ஓய்வு பெற்றதும், பாஜ்வா ராணுவ தளபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஊழியர் கமிட்டியின் கூட்டுத் தளபதிகளின் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் சுபேர் ஹயாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் ஆலோசனைப்படி, சுபேர் ஹயாத், குவாமர் ஜாவேத் பஜ்வா ஆகியோரின் பதவி உயர்வுக்கு ஜனாதிபதி மம்னூன் உசைன் ஒப்புதல் அளித்திருப்பதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பஜ்வா தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பயிற்சி மற்றும் மதிப்பீட்டு பிரிவில் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பதவி வகித்து வருகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply