2 வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய தாய்
தென் கிழக்கு டெல்லி பகுதியில் உள்ள பிரகலாத்பூர் குடியிருப்பு பகுதியில் ஒரு பெண் தனது இரண்டரை வயது குழந்தையை மேல்மாடியில் இருந்து தூக்கி வீசி உள்ளார்.இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் அந்த பெண் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு, செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கடந்த 24 ந்தேதி மாலை நடந்து உள்ளது.
குழந்தைக்கு முகம் மற்றும் தலைபகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. குழந்தை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.குழந்தையின் தந்தை அழகு சாதன பொருட்கள் கடை வைத்து உள்ளார். கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. அந்த கோபத்திலேயே அந்த பெண் குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசி உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply