அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அரசு விடுதியில் சுதந்திரமாக உள்ளார்கள்: ஐகோர்ட்டில் அரசு வழக்கறிஞர் தகவல்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 130 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை மீட்கவேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். தனது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் சார்பில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர்.

ஆனால், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் உறவினர்கள்தான் இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், மனுதாரர்கள் வேண்டுமானால் பொதுநல வழக்கினை தொடரலாம் என்றும் கூறினர். அந்த வழக்கு பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறினர்.

அப்போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் சுதந்திரமாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply