சசிகலா முதல்வராக தடை கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
சசிகலா முதல்வராக பதவியேற்க தடை கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ளது.அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா அக்கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவர் முதலமைச்சராக பதவியேற்கும் நடைமுறைகள் தொடங்கின. சசிகலா முதல்வர் ஆவதற்கு வசதியாக, முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையிட்டு வழக்கில் தீர்ப்பு வெளியிடும் வரை சசிகலா முதலமைச்சராக பதவியேற்கக் கூடாது எனவும், அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க தடை விதிக்கக் கோரியும் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினர் உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
முன்னதாக நேற்று கவர்னரை சந்தித்த சசிகலா தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply