இன்று விமானப் படையின் 66 ஆவது ஆண்டு நிறைவு விழா
இலங்கை விமானப்படையின் 66ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று வியாழக்கிழமை கொண்டாடப்படுகின்றது. விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதியின் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் யாவும் இடம்பெறுவதாக இலங்கை விமானப்படைத்தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கைக்குள் 1951 மார்ச் மாதம் 2ஆம் திகதி ரோயல் லங்கா விமானப்படை நிறுவப்பட்டதுடன் விமானப்படை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 1972 மார்ச் மாதம் 2ஆம் திகதி ரோயல் லங்கா விமானப்படை, தாய் நாட்டை பாதுகாப்பதற்காக இலங்கை விமானப்படையாக பிரகடனப்படுத்தப்பட்டது.
அதனடிப்படையில் இலங்கை விமானப்படையின் 66ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதிவரை இரத்மலானை விமானப்படையின் ஆரம்ப முகாமில் விமானப்படையின் கண்காட்சிகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன. இந்த களியாட்ட நிகழ்வில் விமானப்படையின் இயலுமை மற்றும் திறமைகள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பிரயோசனம் அளிக்கும் வகையில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று விமானப்படை இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அவசர நிலைமைகளின் போது பொது மக்களுக்காக செயற்பட்ட விதம் மற்றும் அந்த சேவைகளை சர்வதேச மட்டத்தில் செயற்படுத்திய விதத்தை பட்டவர்த்தனமாக காட்சிப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வின் போது விமான சாகசங்கள், பரசூட் கண்காட்சி மற்றும் விமானப்படை நாய்களின் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் இந்த கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வுகள் மாலை 2.30 மணி முதல் இரவு 11 மணிவரை இடம்பெறவுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply