இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவிற்கு டி யூ பி கட்சி ஆதரவு தருகிறது
ஆளுங்கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதாக அக்கட்சி கூறியுள்ளது. முறையான கூட்டணி அரசில் அக்கட்சி இணையாது என்று அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். திங்களன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது பற்றிய விவாதம் நடக்கும் என்று தெரிகிறது. ஆனால் இந்த ஆதரவின் பின்னால் இருக்கும் சலுகைகள் தொடர்பான விவரங்கள் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் அக்கட்சி கருக்கலைப்பிற்கும், ஓரின திருமணத்திற்கும் எதிரானது என்பதால் அதன் ஆதரவு கவலைக்குரியதாக இருக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் அதன் உறுப்பினர்களின் ஓரின சேர்க்கை, மதம் தொடர்பான சில கருத்துகளால் சர்ச்சைகள் எழுந்தன.
மூன்றாண்டுகள் பதவிக்காலம் இருந்தும் தேர்தலுக்கு அழைப்பு விடுத்து பெரும்பான்மையை பறிகொடுத்த தெரசா மேவின் பதவிக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை என்றாலும் ஜூன் 19 ஆம் தேதி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் துவங்கிய பின்னரே நிலைமை தெரியவரும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply