மாலி ஐநா அமைதிப்படை தலைமையகம் மீது தீவிரவாத தாக்குதல்

ஆப்பிரிக்க நாடான மாலியில் டிம்பக்டூ நகரில் அமைந்துள்ள ஐநாவின் அமைதிப்படையின் தலைமையகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் ஏழு பேர் இறந்துள்ளனர்; ஏழு பேர் காயமடைந்துள்ளனர். நேற்று அருகாமையிலுள்ள வேறு இரு ஐநா முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் மாலி நாட்டு ராணுவ வீரர் ஒருவரும், ஐநா அமைதிப்படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். மற்றொரு அமைதிப்படை வீரர் காயமுற்றார்.

உலகம் முழுவதும் 16 ஐநா அமைதிப்படைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மிகவும் ஆபத்தானது மாலியிலுள்ள அமைதிப்படையே என்று கூறப்படுகிறது.

டிம்பக்டு தாக்குதலை அடுத்து ஹெலிகாப்டர்கள் பதிலடி கொடுத்ததில் ஆறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மாலி உட்பட பல மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பர்கினா ஃபாசோவில் நடந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளது சஹாரா பாலைவன பிரதேசத்தில் தீவிரவாதிகள் பரவலாக பலம் பெற்று வருவதையே காட்டுவதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply