தீ விபத்திலிருந்து தப்பிக்க 23 மாடி குடியிருப்பின் பால்கனியில் தொங்கிய நபர் :வீடியோ இணைப்பு

சீனாவின் சாங்குங் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டது. 23 தளங்கள் கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 18-வது மாடியில் குடியிருந்த நபர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அதன் கீழ் தளத்திற்கும் தீ பரவியது. இதனால் அந்த தளத்தில் இருந்த ஒருவர், உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக மாடி பால்கனிக்கு வெளியே உள்ள ஜன்னலை பிடித்து தொங்கினார்.

https://www.youtube.com/watch?time_continue=213&v=RFDS-E-FHsE

ஆனால் அவரால் கீழே இறங்க முடியவில்லை. ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே செல்ல முயன்ற அவரை, சிறிது நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்டனர்.இந்த காட்சியை வீடியோ எடுத்த நபர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.

அதிர்ஷ்டவசமாக அவர் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினார். 23 மாடி குடியிருப்பின் பால்கனியில் தொங்கி தீயிலிருந்து தனது உயிரை காப்பாற்றிய சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply